ஜுன் 30 தேதியன்று, (எண் 14606) ஹரிபூர் செல்லும் ரயிலில் பர்வின் கோமல் என்பவர் பயணம் செய்துள்ளார். அப்போது, தான் பயணித்த ரயிலில் கழிவறை அசுத்தமாக இருந்தது என சென்ட்ரல் ரயில்வேக்கு ட்விட்டர் மூலம் புகார் அளித்துள்ளார்.
ரயில் எண், வழித்தடம் அனைத்தையும் குறிப்பிட்டு கழிவறை அசுத்தமாக உள்ளது என ட்விட் செய்துள்ளார். அவரது ட்விட்டுக்கு பதிலளித்த சென்ரல் ரயில்வே, இந்த "புகார் குறித்து கவனியுங்கள்" என, நார்தன் ரயில்வேயை டேக் செய்து புகரை கைமாற்றியது.
அதற்கு நார்தன் ரயில்வே 'புகார் குறித்து கவனியுங்கள்' என அப்பகுதிக்குட்பட்ட ரயில்வே மேலாளரை டேக் செய்து புகரை கைமாற்றியது. அதற்கு பதிலளித்த ரயில்வே மேலாளரை 'புகார் குறித்து கவனியுங்கள்' என அவருக்கு கீழ் உள்ள மூத்த பிரிவு பொறியாளரை டேக் செய்து புகரை கைமாற்றினார்.
அடுத்தடுத்து ட்விட்டரில் டேக் செய்து கொண்ட ரயில்வே அலுவலர்கள் இதுகுறித்து, சம்மந்தப்பட்ட அலுவர்களிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி அறிவுறித்தியுள்ளேன் என மூத்த பிரிவு பொறியாளர், ரயில்வே மேலாளரிடம் பதிலளித்தார்.