நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில் பங்கேற்க ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் காலதாமதமாக வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து உள்ளே ஓடி சென்றார். எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளின் குறிப்பு மற்றும் முக்கிய ஆவணங்கள் அவரிடமிருந்தது. இதனை அங்கிருந்தவர்கள் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
இதனை கலாயத்து சமூக வலைதளவாசிகள் கருத்து பதிவிட்டுவருகின்றனர்.