தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டம் : இந்திய ரயில்வேக்கு ரூ. 84 கோடி இழப்பு - இந்திய ரயில்வே குடியுரிமை திருத்தச் சட்டம்

கொல்கத்தா : குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரத்தில் இந்திய ரயில்வேக்கு ரூ. 84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Railways
Indian Railways

By

Published : Jan 11, 2020, 3:59 PM IST

Updated : Jan 11, 2020, 4:32 PM IST

இதுதொடர்பாக கிழக்கு ரயில்வே கொல்கத்தா உயர் நீதிமன்றம் முன்பு சமர்ப்பித்த அறிக்கையில், " குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டத்தின் போது நிகழ்ந்த கலவரத்தில் இந்திய ரயில்வேக்கு ரூ. 72.2 கோடி அளவிற்கு பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சீல்தா பிரிவில் ரூ. 46 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, மால்தா பிரிவில் கிட்டத்தட்ட ரூ. 24.5 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

அதேபோன்று தென் கிழக்கு ரயில்வே சமர்ப்பித்திருந்த மற்றொரு அறிக்கையில், ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில் தண்டவாளம்
என ரூ. 12.75 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை போராட்டத்தின் போது, ரயில்வே, பொதுமக்களுக்கு ஏற்பட்ட பொருட் சேதத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல வழக்கில் இந்த அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மனுவை கொல்கத்தா தலைமை நீதபதி டிபிஎன் ராதாகிருஷ்ணன், நீதிபதி ஏ பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்கிறது.

இதையும் படிங்க :'குடியுரிமை திருத்தச் சட்டம்' பாஜகவுக்கு தேர்தல் லாபத்தை தருமா?

Last Updated : Jan 11, 2020, 4:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details