டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ரயில்வே ஊழியர்களுக்கு வெகுமதித் தொகை (போனஸ்) வழங்கும் முடிவை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி 78 நாட்களின் ஊதியத்தொகையை வெகுமதியாக ரயில்வே ஊழியர்களுக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் மத்திய அரசிற்கு 2024 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் நிதி செலவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "11.52 லட்ச ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் வெகுமதியாக வழங்கப்படவுள்ளது. இது ரயில்வே துறையின் உற்பத்திக்கு கிடைத்த பரிசு" எனத் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் இ-சிகரெட்டிற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.