தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தற்கொலை செய்துகொண்ட ரயில்வே ஊழியர்! - மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட ரயில்வே ஊழியர்

லக்னோ: கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

railway-employee-commits-suicide-at-quarantine-centre-in-firozabad
railway-employee-commits-suicide-at-quarantine-centre-in-firozabad

By

Published : Apr 29, 2020, 6:40 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரைச் சேர்ந்த 52 வயதுடைய ரயில்வே ஊழியர் ஒருவர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஏப்ரல் 20ஆம் தேதி எஃப்.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சந்தேகத்திற்குரிய அறிகுறிகள் தெரியப்பட்டதால் இவருக்கென தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்று முறை பரிசோதனை மேற்கொண்டதில் இவர் கரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என முடிவு வந்த பிறகும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டதால் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், அவர் இன்று காலை தனிமைப்படுத்தப்பட்ட அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு காலை உணவு வழங்கச் சென்ற செவிலியர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு இச்சம்பவம் குறித்து தகவலளித்தார். பின்னர், காவல் துறையினருக்கு தகவலளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

உத்தரப் பிரதேச மாநில சுகாதாரத் துறையினரின் விவரங்களின் அடிப்படையில், மாநிலத்தில் தற்போதுவரை, 99 பேர் கரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் பார்க்க: ஹைதராபாத் ஐஐடியில் பதற்றம்... காவலர்களைத் தாக்கிய வெளிமாநில தொழிலாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details