மத்திய டெல்லியில் உள்ள இந்திய ரயில்வேயின் தலைமையகமான ரயில் பவனில் பணியாற்றும் ஆர்.பி.எஃப். பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, ரயில் பவன் இரண்டு நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.
ரயில் பவனின் நான்காவது மாடியில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) இயக்குநர் ஜெனரல் அருண்குமார் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றிய ஊழியருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே கடந்த மே 6ஆம் தேதிமுதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கரோனா இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.