மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தின் மகாத் பகுதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டடம் நேற்று மாலை (ஆகஸ்ட் 25) திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் மூன்று தளங்கள் இடிந்து விழுந்துள்ளது. இதுவரை 60க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராய்காட் மாவட்ட ஆட்சியர் நிதி சவுதாரி சம்பவயிடத்தில் இருந்து மீட்புப் பணிகளை கண்காணித்து வருகிறார்.
இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் இடிந்து விழுந்த ஐந்து மாடி கட்டடங்களில் சிக்கிய 15 பேர் மீட்பு!