தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திடீரென்று கல்லூரி மைதானத்தில் தரையிறங்கிய ராகுலின் விமானம்! - ராகுல் காந்தி ஹரியானா தேர்தல்

ரேவாரி: பாதுகாப்பு காரணங்களால் ராகுல் காந்தி சென்ற விமானம் கல்லூரி மைதானம் ஒன்றில் தரையிறக்கப்பட்டது.

Rahul

By

Published : Oct 18, 2019, 11:17 PM IST

ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்காரணமாக பாஜக, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சூறாவளிப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹரியானாவில் தனது பரப்புரையை முடித்துவிட்டு ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் டெல்லி திரும்பிக்கொண்டிருந்தார். டெல்லியில் வானிலை மிகவும் மோசமாக இருந்ததால், ராகுல் காந்தி சென்ற ஹெலிகாப்டர் ஹரியானாவின் ரேவாரியில் உள்ள கே.எல்.பி. கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அதன்பின் அவர் கார் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக ஹரியானாவின் மஹேந்திரகார்தலில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் ராகுல் காந்தி இந்தியாவின் தற்போது நிலவும் பொருளாதாரத்தில் மந்தநிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாகச் சாடினார்.

இதையும் படிங்க:எந்தவிதமான கெமிஸ்டிரி இவர்களுக்கு இடையே இருக்கு? பிரதமர் மோடி கேள்வி

ABOUT THE AUTHOR

...view details