சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு கோடியை எட்டியது. இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்த ராகுல், இதை அமேதி தொகுதியில் காங்கிரஸ் தொண்டர்களுடன் கொண்டாட உள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.
1 கோடி ட்விட்டர் பாலோயர்கள், நன்றி தெரிவித்த ராகுல் - ட்விட்டர்
டெல்லி: ட்விட்டர் வலைத்தளத்தில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியதற்குக் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
Rahul
அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இராணியிடம் தோல்வியை சந்தித்தபின் தற்போது அமேதி தொகுதிக்குச் செல்லவுள்ளார். ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை 4.85 கோடி பேரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 1.42 கோடி பேரும் பின்தொடர்கின்றனர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜிரிவாலை 1.51 பேர் பின் தொடர்கின்றனர்.