நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து முன்னணி ஐ.டி நிறுவனமான இன்போசிஸின் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்த கருத்து தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
அண்மையில் அவர் அளித்த பேட்டியில், இந்தியா சுதந்திரமடைந்த காலத்திற்குப்பின் மிகமோசமான நிலையை நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜி.டி.பி.) சந்திக்கவுள்ளது என எச்சரித்தார்.
ஏற்கெனவே, நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரும் சரிவை சந்தித்துவருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸும் தெரிவித்தார்.
இந்நிலையில், நாராயண மூர்த்தியின் கருத்தை வைத்து பிரதமர் மோடியை கிண்டலடிக்கும் விதமாக ட்விட்டர் பதிவு ஒன்றை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். நாராயண மூர்த்தியின் கருத்துடன் 'மோடி இருக்கும்போது எதுவும் சாத்தியமாகும்' என பாஜகவின் தேர்தல் கோஷத்தை இணைத்து பதிவிட்டுள்ளார் ராகுல். சீனா விவகாரம், கோவிட்-19 பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடியை கடுமையாக ராகுல் காந்தி சாடிவருகிறார்.
இதையும் படிங்க:'எல்லாம் நன்மைக்கே', ராஜஸ்தான் அரசியல் விவகாரம் குறித்து காங்கிரஸ்!