இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகளவில் பயன்படுத்தும் நோக்கில் அரசு பல முயற்சிகளை செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக, வேஸ்டாஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஹென்ரிக் ஆன்டர்சனுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார்.
அப்போது, "காற்றிலிருக்கும் ஆக்ஸிஜனை டர்பைன் மூலம் பிரித்து எடுத்து விட முடியும். இது சவாலாக இருந்தாலும், இதனை செய்ய முடியும். ஆக்ஸிஜன் சந்தையை கைப்பற்றிவிட்டால், ஆற்றலுடன் தண்ணீர், ஆக்ஸிஜன் ஆகியவற்றையும் சேகரிக்க முடியும்" என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மேலும், டர்பைன்களை பயன்படுத்தி ஆக்ஸிஜன், குடிநீர் ஆகியவற்றை உற்பத்தி செய்யலாம் என மோடி தெரிவித்தார்.