தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரஃபேல் விவகாரத்தில் உண்மையை மறைக்க முடியாது -ராகுல் - ராகுல்

டெல்லி: ரஃபேல் விவகாரத்தில் உண்மையை மறைக்க முடியாது என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராகுல்

By

Published : Mar 18, 2019, 9:54 AM IST

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் விவகாரத்தில் உண்மையை இந்தியர்களிடம் மோடி மறைக்க முடியாது எனக் குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக பிரதமர் மோடி தனதுட்விட்டர் பக்கத்தில் தன் பெயருடன் சௌகிதார் (காவலர்) என்று சேர்த்து தன் தேர்தல் பரப்புரையை தொடங்கியதற்கு ராகுல் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்

பிரதமர் மோடி தன்னை இந்தியாவின் காவலர் என்று சொன்னதற்கு ரஃபேல் விவகாரத்தை குறிப்பிட்டராகுல், மோடியை'திருடன்' எனக் கூறியிருந்தார்.

பிரதமர் மோடி தன் பெயருக்கு பின் சௌகிதார்( காவலர்) எனச் சேர்த்த பின் அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஜே.பி.நட்டா, ஹர்ஷவர்தன் ஆகியோரும் தன் பெயருக்கு பின்னால் சௌகிதார் (காவலர்) என சேர்த்தனர்.


ABOUT THE AUTHOR

...view details