தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுகாதார ஊழியர்களின் நலனை மத்திய அரசு புறக்கணிக்கிறது!

டெல்லி : கோவிட் -19 பெருந்தொற்று நோய்க்கு எதிரான போரில் முன்னணியில் நின்ற சுகாதார ஊழியர்களின் நலனை மத்திய அரசு முழுமையாக புறக்கணித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சுகாதார ஊழியர்களின் நலனை முற்றுமுழுதாக மத்திய அரசு புறக்கணித்து வருகிறது!
சுகாதார ஊழியர்களின் நலனை முற்றுமுழுதாக மத்திய அரசு புறக்கணித்து வருகிறது!

By

Published : Sep 18, 2020, 6:48 PM IST

கரோனா பேரிடர் கால மேலாண்மை, வேலை வாய்ப்பின்மை, புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இழப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி விமர்சித்துவருகிறார்.

இந்நிலையில், கோவிட் -19 பாதிப்பிற்குள்ளான மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களை மத்திய அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ள அவர், "நாடு முழுவதும் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்க போராடிவரும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களின் நிலை குறித்து எந்த தரவுகளையும் இந்த அரசு வைத்திருக்கவில்லை.

பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதையை விட மணியடிப்பது, விளக்கு ஏற்றுவது போன்றவையே முக்கியம். கரோனா வீரர்களை ஏன் அவமதிக்கிறார்கள்?" என கேள்வியெழுப்பி உள்ளார்.

முன்னதாக, கரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் குறித்த தரவுகள் தங்களிடம் இல்லை என மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details