கடன் பெற்று அதனைத் திரும்ப செலுத்தாதவர்கள் குறித்த முக்கிய அறிக்கையை, இந்திய ரிசர்வ் வங்கிகடந்த சில நாள்களுக்கு முன் வெளியிட்டது. அதன்படி, வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியாது என அறிவித்த 50 பெருநிறுவன முதலாளிகளின் கடன்தொகை 68 ஆயிரம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்துள்ளது. இந்தப் பட்டியலில் நீரவ் மோடி, முகுல் சோக்சி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடினார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், ராகுலின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவைச் சேர்ந்த கோபால் கிருஷ்ண அகர்வால் கூறுகையில், ”நீரவ் மோடி, முகுல் சோக்சி, விஜய் மல்லையாவுக்க யார் கடன்தொகை கொடுத்தார்கள் என்று முன்னாள் ஆர்பிஜ ஆளுநர் ரகுராம் ராஜனிடம் ராகுல் கேட்டிருக்க வேண்டும்.