கரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு 29 நாள்களாகியுள்ள நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தொடவுள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்படும் என மக்களிடையே பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் உணவுக்காகவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் தவித்து வரும் நிலையில், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தியாவின் முதுகெலும்பாகப் பார்க்கப்படும் சிறு, குறு தொழில்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வெகு நாள்கள் ஆகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மக்களிடன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், ''கரோனா வைரஸால் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அத்தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு, சலுகைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.