தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரு பிரதமராக மோடி தோற்றுவிட்டார் - ராகுல்காந்தி விளாசல் - பிரதமர் மோடி

அகமதாபாத்: நரேந்திர மோடி ஒரு பிரதமராக தோற்றுவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

modi

By

Published : Apr 19, 2019, 9:22 AM IST

குஜராத் மாநிலம் குட்ச் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில்,

"நரேந்திர மோடி, அனில் அம்பானிக்கு இலவசமாக ரூ.30 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளார். 45 வருடங்களாக வேலைவாய்ப்பில் இருந்த வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் குறைந்துள்ளது. ஒரு பிரதமராக மோடி தோற்று விட்டார். தற்போது அவர் தேர்தலிலும் தோற்கடிக்கப்படுவார்.

வேலைவாய்ப்பை உருவாக்காமல் அதனை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் மோடி. பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டி நடவடிக்கையும்தான் இதற்கு முக்கிய காரணம். நாங்கள் எளிமையான முறையில் ஜிஎஸ்டி வரியையும், வருடத்திற்கு 22 லட்சம் அரசாங்க வேலையையும் வழங்குவோம்" எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details