காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தியாவின் பணக்காரர்களாக உள்ள 1 விழுக்காட்டினர் மீதமுள்ள 956 கோடி மக்களின் சொத்தைவிட அதிகம் கொண்டிருக்கின்றனர். இந்திய பணக்காரர்களின் சொத்துமதிப்பானது ஒரு ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தொகையைவிட அதிகமாகவுள்ளது.
ஏழைகளிடம் உள்ள பணத்தை மோடி பறித்துக்கொண்டு தனது முதலாளி நண்பர்களுக்கு தருகிறார். நாட்டிலுள்ள 1 விழுக்காடு பணக்காரர்கள் மீதமுள்ள மக்களின் சொத்தை விட நான்கு மடங்கு அதிகமாகக் கொண்டுள்ளனர்" என்று பதிவிட்டிருந்தார்.
சமீபகாலமாக இவ்வாறான விமர்சனங்களை காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துவருகின்றனர். அதன்படி கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பேச்சாளர் ரந்தீப் சிங் சூர்ஜிவாலா பேசுகையில், ”நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டுவதற்கான 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை மத்திய அரசு அதானியின் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
அதானியின் நிறுவனத்திற்கு நீர்மூழ்கிக் கப்பல் கட்டுவதில் எவ்வித முன் அனுபவமும் இல்லை. அதானியினுடனான நட்பை பேணுவதற்காக மோடி அரசு இந்தச் செயலைச் செய்துள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை கொள்முதல் வழிமுறைகளின் படி நடக்காமல் அதனை மீறியுள்ளது” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியும் மத்திய அரசும் முதலாளிகளுக்குச் சாதகமாக இருக்கிறது என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க:நடப்பாண்டில் நாட்டின் வளர்ச்சி 5.8 விழுக்காடாக இருக்கும்!