தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீன விவகாரம்: அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் ராகுல் - அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் ராகுல்

டெல்லி: வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு இரண்டு நாள்கள் எடுத்துக் கொண்டது ஏன்? என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

Raga
Raga

By

Published : Jun 17, 2020, 5:47 PM IST

இந்தியா - சீனா எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளாத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவருகிறது. நீண்ட நேரம் ஆகியும் பிரதமர் உள்பட மூத்த அமைச்சர்கள் இரங்கல் தெரிவிக்காமல் மெளனம் காத்து வந்தனர். இந்நிலையில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்தார்.

இதை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு இரண்டு நாள்கள் எடுத்துக் கொண்டது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வேதனை அளித்திருந்தால்

  • உங்கள் ட்விட்டர் பதிவில் சீனாவின் பெயரை குறிப்பிடாமல் இந்திய ராணுவத்தை அவமதித்தற்கு காரணம் என்ன?
  • இரங்கல் தெரிவிப்பதற்கு இரண்டு நாள்கள் எடுத்துக் கொண்டது ஏன்?
  • ராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்ட பிறகும் கூட பரப்புரை மேற்கொண்டதற்கு காரணம் என்ன?
  • ஊடகம் ராணுவத்தை குறைக் கூறும்போது, நீங்கள் ஏன் ஒளிந்து கொண்டீர்கள்?
  • அரசை விமர்சிக்காமல் போலி ஊடகத்தை வைத்து ராணுவத்தை விமர்சித்ததற்கு காரணம் என்ன? " என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அமைதியை விரும்பும் இந்தியா, பதிலடி கொடுக்கவும் தயங்காது - சீனாவுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details