இது குறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங், “காங்கிரஸ் கட்சியை கட்டியெழுப்புவதற்கான சவாலை கட்சித் தலைமை ஏற்க வேண்டும். அதிலும் குறிப்பாக மோடி -அமித் ஷா இணையரை எதிர்க்கொள்ளும் தைரியம் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காங்கி, பிரியங்கா காந்தி வதோராவிற்கு உள்ளது என நான் நம்புகிறேன்.
பாஜக தலைமையிலான அரசின் திறனற்ற செயலை மூடி மறைப்பதற்கு காந்தி அறக்கட்டளை பிரச்னையை கையில் எடுகின்றனர். ராகுலின் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன். அதுமட்டுமின்றி, பிரியங்கா காந்தியின் உத்தரப் பிரதேச செயல்பாட்டை நான் பாராட்டுகிறேன். இதை காங்கிரசில் சில தலைவர்கள் பாராட்டவில்லை. இதனை பாராட்டவில்லையென்றால் அவர்கள் ஏன் காங்கிரசில் இருக்கிறார்கள்? " எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடியும், அமித் ஷாவும் சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை), ஐடி (வருமான வரித்துறை), இடி (அமலாக்கத்துறை) மூலம் நேரு காந்தி குடும்பத்தை பயமுறுத்த நினைக்கின்றனர். ஆனால் அந்த குடும்பமோ, ஆங்கிலேயர்களையே எதிர்த்து நின்று சிறை எல்லாம் சென்றது. அதனால் இது போன்ற மாயையை மோடி -ஷா உருவாக்க வேண்டாம்.