தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கரோனா நடவடிக்கைகள் சிறப்பு - ராகுல் பெருமிதம் - ராகுல் பெருமிதம்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் நடைபெற்றுவருவதாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Rahul
ராகுல்

By

Published : Apr 17, 2020, 11:33 PM IST

Updated : Apr 18, 2020, 10:13 AM IST

கரோனா வைரஸ் தொற்றுக்கு நாடு முழுவதும் தற்போதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,076 பேர் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரும் காலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் குறைக்கவும், நாட்டை பழைய நிலைக்கு மாற்றிடவும் மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப், புதுச்சேரி ஆகிய காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் கரோனா தடுப்பில் சிறப்பாகச் செயல்பட்டுவருவதாகப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இருபதே நாள்களில் 200 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையை உருவாக்கியிருப்பதாகவும், மனமிருந்தால் மார்க்கம் உண்டு எனவும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Apr 18, 2020, 10:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details