அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சரை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்பட்டுவருகிறது. ஜம்முவைச் சேர்ந்த சன்னி ஆனந்த், காஷ்மீரை சேர்ந்த தார் யாசின், முக்தர் கான் என மூன்று இந்தியர்களுக்கு இந்தாண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நிலவும் வாழ்நிலை குறித்த தத்ரூபமான புகைப்படங்களை வெளியிட்ட காரணத்தால் இவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது வென்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் வாழ்நிலையின் தத்ரூபமான புகைப்படங்களை வெளியிட்டு புலிட்சர் விருது வென்ற சன்னி ஆனந்த், தார் யாசின், முக்தர் கான் ஆகியோருக்கு வாழ்த்துகள்.