உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாதர் மற்றும் நாகர் ஹவேலியில் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், "அரசியலமைப்பு சட்டம் 370 நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஜம்மு - காஷ்மீரில் மக்கள் செத்து மடிவதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இந்த கருத்து பாகிஸ்தானில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஐநாவில் பாகிஸ்தான் அளித்த அறிக்கையில், ராகுல் காந்தி கருத்தும் இடம்பெற்றுள்ளது. இதனை நினைத்து காங்கிரஸ் கட்சியினர் வெட்கப்பட வேண்டும்.
இனி காஷ்மீர் வளர்ச்சி அடையும். அனைத்து மக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அங்கு பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. பலர் இதற்கு ஆதரவது தெரிவித்து வந்தாலும், சிலர் இதனை எதிர்க்கின்றனர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா," நீர் சேமிப்புக்கென்று பிரதமர் நரேந்திர மோடி புதிய அமைச்சகத்தை உருவாக்கியுள்ளார். நீர் தேகத்திற்கும், அணைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்கும் இந்த அமைச்சகம் உதவும். அனைத்து கிராமத்துக்கும், வீட்டிற்கும், விவசாயிகளுக்கும் நீர் வழங்கப்படும். குறைந்த நீரில் அதிகம் விளைச்சல் பெற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கவும் இந்த அமைச்சகம் உதவும்" என்றார்.