பிரதமர் நரேந்திர மோடி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதனை இந்திய பொருளாதாரம் மீதான பயங்கரவாத தாக்குதல் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
இந்தியப் பொருளாதாரம் மீது பணமதிப்பிழப்பு என்னும் பயங்கரவாத தாக்குதல் நடந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தத் தாக்குதலில் லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்முனைவோர், பல லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழந்தனர்.
இந்தக் கொடூரமான தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் இன்னும் நீதிக்கு முன்னர் கொண்டுவரப்படவில்லை.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'எச்1பி விசா மறுப்பு, மோடிக்கு கிடைத்த வெற்றி' - பிரியங்கா காந்தி கிண்டல்!