காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஐந்து கருத்துகளை முன்வைத்துள்ளார். அவை:
- மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியைப் (ஜிஎஸ்டி) பகிர்ந்தளிக்க மத்திய அரசு வாக்குறுதி அளித்தது.
- பிரதமர் மற்றும் கோவிட்19ஆல் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
- கார்ப்பரேட்டுகளுக்கு 1.4 லட்சம் கோடி வரி குறைப்பை வழங்கும் பிரதமர், எட்டாயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் இரண்டு விமானங்களை வாங்குகிறார்.
- மாநிலங்களுக்குச் செலுத்த மத்திய அரசிடம் பணம் இல்லை.
- நிதியமைச்சகம் மாநிலங்களுக்கு கடன் இருப்பதாக சொல்கிறது