தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகளின்பேரில் மக்களைத் தூண்டிவிடும் ராகுல் - பாஜக குற்றச்சாட்டு

விவசாயிகளின்பேரில் மக்களைத் தூண்டிவிட்டு ராகுல் காந்தி அரசியல் லாபம் அடைய பார்க்கிறார் என பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பாத்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Feb 4, 2021, 9:50 AM IST

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டம் தொடர்பாகவும், மத்திய நிதிநிலை அறிக்கைத் தொடர்பாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை கடும் விமர்சனம் செய்தார்.

இதற்குப் பதிலளிக்கும்விதமாக பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பாத்ரா செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "ராகுல் காந்தி விவசாயிகளின்பேரில் மக்களைத் தூண்டிவிடும் முயற்சியை மேற்கொள்கிறார். கட்சி சார்பில்லாத போராட்டத்தை தனது அரசியல் லாபத்திற்குப் பயன்படுத்த நினைக்கிறார்.

மத்திய பாஜக அரசு விவசாயிகள் உள்ளிட்ட அனைவரின் நலன்களையும் பாதுகாக்க துணை நிற்கும். 1998ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு உரிமைக்காகப் போராடிய 28 விவசாயிகளைச் சுட்டுக்கொன்றதை மறந்துவிட்டு இப்போது சந்தர்ப்பவாதமாக காங்கிரஸ் பேசுகிறது. நாட்டிற்கு எதிரான செயல்பாடுகளை முன்னணி அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளக் கூடாது" எனக் கூறினார்.

இதையும் படிங்க:புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு செலவு எவ்வளவு? மத்திய அரசு தகவல்

ABOUT THE AUTHOR

...view details