17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், ஆறு கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவுப் பெற்ற நிலையில், வரும் 19ஆம் தேதி 59 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உச்சக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பீகார் மாநிலத்தில் இன்று தனது தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார் ராகுல்.
பீகாரில் ராகுல் காந்தி இன்று பரப்புரை! - address rally
பாட்னா: மக்களவைத் தேர்தல் பரப்புரை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் மகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
படாலிபுத்ரா தொகுதியில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகளான மிசா பாரதி ஆதரவாக, மாலை 3.30 மணிக்கு பிக்ராம் நகரில் ராகுல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். பின்னர் 4.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் பாட்னா சாஹிப் தொகுதி வேட்பாளர் சத்ருகன் சின்ஹாக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் ராகுல், பேரணியிலும் பங்கேற்க உள்ளார்.
பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.