தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சி.ஏ. மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ராகுல் - காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி

டெல்லி: சார்டர்ட் அக்கவுண்ட் விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்ய வலியுறுத்தும் சி.ஏ. மாணவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

rahul-gandhi-supports-ca-students-

By

Published : Sep 25, 2019, 1:17 PM IST

சார்டர்ட் அக்கவுண்ட் விடைத்தாளில் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மறு மதிப்பீடு செய்ய வலியுறுத்தியும் 200-க்கும் மேற்பட்ட சி.ஏ. மாணவர்கள் நேற்று டெல்லி இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் மூன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சரியான விடைகளை தவறு என்று குறிப்பிட்டு மதிப்பெண்கள் காரணமில்லாமல் குறைக்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், ஐ.சி.ஏ.ஐ. நிர்வாகம் வெளியிட்ட மாதிரி மதிப்பெண் பட்டியலுடன் தங்களது விடைத்தாளை ஒப்பிட்டபோது அதில் பெரும்பாலான விடைகள் தவறாக இருந்ததாகவும் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சி.ஏ. மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், நாடு முழுவதும் 12 லட்சம் சி.ஏ. மாணவர்கள் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவருகின்றனர்.

விடைத்தாள்களின் மதிப்பீட்டில் பிழைகள் ஏற்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இதுதொடர்பாக ஐ.சி.ஏ.ஐ. நிர்வாகம் அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் மாணவர்களின் இந்தக் கோரிக்கை நியாயமானது, இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க...

சிதம்பரத்தை தொடர்ந்து சரத் பவார்! - மத்திய அரசின் கனல் பார்வையில் தகிக்கும் தலைவர்கள்

ABOUT THE AUTHOR

...view details