தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த திட்டமும் இல்லை’ - ராகுல் வேதனை - rahul gandhi speech in lok sabha

டெல்லி: மத்திய அரசு அறிவித்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

டெல்லி

By

Published : Jul 11, 2019, 1:01 PM IST

இன்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, ‘நாடு முழுவதும் விவசாயிகள் பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். வயநாட்டைச் சேர்ந்த விவசாயிகள் 8 ஆயிரம் பேருக்கு வங்கிக்கடனை திரும்ப செலுத்தவதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 18 விவசாயிகள் கேரளாவில் தற்கொலை செய்துள்ளனர்.

விவசாயிகள் வங்கிக்கடன் தொகையை திரும்ப செலுத்துவதற்கு நிறுத்தி வைத்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், மத்திய அரசாங்கம் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட மறுத்து வருகிறது.

கடந்த 5 வருடங்களில் மட்டும் பாஜக அரசு தொழிலதிபர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடிக்கான கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கொடுக்கும் கடனை திரும்பி வசூல் செய்யும் அரசு, தொழிலதிபர்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டி இரட்டை வேடம் போடுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அதேபோல், மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு எவ்வித அறிவிப்பும் கொடுக்கவில்லை. பாஜக அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று என கேள்வி எழுப்பினார்.

ABOUT THE AUTHOR

...view details