இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நடுத்தர வர்க்கத்தினரும், ஏழைகளும் மோடி அரசின் முதலாளிகளுக்கு கிடைக்கும் பரிசுகளுக்கு பணம் செலுத்துகிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பெட்ரோல், டீசல் விலையையும் தற்போதுள்ள டீசல், பெட்ரோல் விலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் ஒரு படத்தையும் பதிவிட்டிருந்தார்.
பாஜக அரசாங்கம் பெட்ரோல் மீதான கலால் வரியை 258.47 சதவீதமும் டீசல் மீதான 819.94 சதவீதமும் உயர்த்தியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்,டீசல் விலையை இன்று உயர்த்தின. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 48 பைசாவும், டீசல் லிட்டருக்கு 23 பைசாவும் உயர்ந்தன. ஜூன் 7 ஆம் தேதியிலிருந்து ஒன்பதாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.