தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மோடி பொய் சொல்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது' - ராகுல் காந்தி - எல்லை மோதல் குறித்து சசி தரூர்

டெல்லி: சீன ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் சொல்லி இருக்கிறார் என்பது, பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Rahul Gandhi slams Centre
Rahul Gandhi slams Centre

By

Published : Sep 15, 2020, 8:19 PM IST

தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லையில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து விளக்கினார். ஆனால், எல்லையிலுள்ள நிலை குறித்து விவாதிக்க மத்திய அரசு மறுப்பதாகக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "சீன ஆக்கிரமிப்பு விவகாரத்தில் மோடி பொய் சொல்லி இருக்கிறார் என்பது, பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிக்கையில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

நம் நாடு எப்போதும் ராணுவத்திற்கு ஆதரவாக இருந்திருக்கிறது, இனியும் இருக்கும். ஆனால் மோடி, எப்போது சீனாவுக்கு எதிராக உறுதியாக நிற்பார். சீனா ஆக்கிரமித்துள்ள நமது இடம் எப்போது மீட்கப்படும்? சீனாவின் பெயரை சொல்லக்கூட அஞ்சி நடுங்காதீர்கள்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராகுல் ட்வீட்

இந்திய-சீன விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி, "1962ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது, ​​அடல் பிஹாரி வாஜ்பாய் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றார். அவரின் கோரிக்கையை ஏற்று, இது குறித்து இரண்டு நாள் விவாதிக்க பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒப்புக் கொண்டார்" என்றார்.

காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, "இந்தியாவின் பிரதமர் எங்கே? தனது அரசின் தோல்வி குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதில் இருந்து அவர் ஏன் ஓடுகிறார்? இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதா? என்பது போன்ற சில எளிமையான கேள்விகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் நிச்சயம் பதிலளிக்க வேண்டும்" என்றார்.

அதேபோல திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், "எல்லைப் பகுதியில் சீனா ஊருடுவியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், சீனா நமது எல்லைக்குள் நுழையவில்லை என்று கூறி ஒரு அசாதாரண அறிக்கையை பிரதமர் ஏன் வெளியிட்டார் என்று அரசால் விளக்க முடியுமா? பிரதமரின் நிலைப்பாட்டை அரசு மாற்றியிருக்கிறதா?

எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் இப்போது பேச்சுவார்த்தைகளை நடத்த ஒப்புக் கொண்டன என்று பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார், ஆனால் எல்லை எங்கே இருக்கிறது என்பது குறித்து இரு நாடுகளும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளதால், இது எல்லையில் மற்றொரு மோதலை ஏற்படுத்துமே?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்

இதையும் படிங்க: எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயார் - ராஜ்நாத் சிங்

ABOUT THE AUTHOR

...view details