கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. பொதுத் துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என அரசு தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி, ராணுவ வீரர்களின் ஓய்வூதியத் தொகை நிதிநிலை அறிக்கையில் குறைக்கப்பட்டுள்ளது.
மோடி அரசுக்கு இவர்களே கடவுள் - ராகுல் காந்தி விமர்சனம் - ராகுல் காந்தி
டெல்லி: மோடி அரசுக்கு குறிப்பிட்ட சில தொழிலதிபர்களே கடவுள்களாகத் திகழ்கின்றனர் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி
இதனைக் கடுமையாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, "மோடி அரசுக்கு இளைஞர்களோ விவசாயிகளோ கடவுள் அல்ல; குறிப்பிட்ட மூன்று நான்கு நட்பு தொழிலதிபர்களே கடவுள்களாகத் திகழ்கின்றனர்" என்றார்.
முன்னதாக, மத்திய அரசில் கோழைத்தனம் ஆழமாக ஊன்றி கிடக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.