17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றன. இதில் ஐந்து கட்டங்களுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலின் முடிவுகள் வரும் 23ஆம் தேதி வெளியாகிறது.
‘உங்க டைம் முடிஞ்சு போச்சு மோடி ஜி’ - ராகுல் காந்தி! - PM Modi
டெல்லி: ‘நாட்டில் ஆட்சி மாறுவதற்கான நேரம் வந்துவிட்டதால், உங்கள் டைம் முடிந்துவிட்டது மோடி ஜி’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பரப்புரை செய்து வருகின்றன. இதில் பாஜக, காங்கிரஸ் இடையே நாடு முழுவதும் கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்தல் பரப்புரைக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘காங்கிரஸ் கட்சிக்கு இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து வயது வாக்காளர்களும் ஆதரவு அளிக்கின்றனர். நாட்டில் ஆட்சி மாறுவதற்கான நேரம் வந்துவிட்டதால், மோடி ஜி உங்க நேரமும் முடிந்துவிட்டது’ என பதிவிட்டுள்ளார்.