ராகுல் காந்தி கரோனா பரவல் குறித்தும் அதனால் ஏற்படவிருக்கும் பொருளாதார பாதிப்புகள் குறித்தும் தொடக்கம் முதலே ராகுல் காந்தி எச்சரித்துவந்தார்.
குறிப்பாக கரோனா பரவலின் அபாயங்கள் குறித்து ராகுல் காந்தி பிப்ரவரி 12ஆம் தேதி தனது முதல் ட்வீட்டை பதிவு செய்திருந்தார். இருப்பினும், ராகுலின் எச்சரிக்கைகள் இணையத்தில் தொடர்ந்து கிண்டல் செய்யப்பட்டன.
இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய-சீன ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் இந்திய பகுதிக்குள் நடந்ததாகவும் சீனா அத்துமீறியதாகவும் இந்திய ராணுவம் குற்றஞ்சாட்டியது. ஆனால், பிரதமர் மோடி இந்தியாவில் யாரும் ஊடுருவவில்லை என்றார்.
இந்நிலையிவ், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா பரவல் மற்றும் பொருளாதார வீழ்ச்சி பற்றி நான் தொடர்ந்து எச்சரித்தேன். அவர்கள் (மத்திய அரசு) கண்டுகொள்ளவில்லை. பேரழிவு தொடர்ந்தது.
இப்போது சீனாவை பற்றி தொடர்ந்து எச்சரித்துக்கொண்டிருக்கிறேன். இப்போதும் அவர்கள் (மத்திய அரசு) கண்டுகொள்வதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் 49,310 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,87,945ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 740 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்; கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,601ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: எத்தனை ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன? - ரயல்வே துறை விளக்கம்!