கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்கு கனமழை பெய்து வருகிறது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பெரும்பாலன இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வயநாட்டில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த ராகுல் காந்தி! - Rahul Gandhi reaches Kerala's Kozhikode
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை அந்த தொகுதி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பார்வையிட வந்தார்.
வயநாட்டில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த ராகுல் காந்தி!
இதில் மலப்புரம், வயநாடு, கண்ணூர், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வயநாடு வெள்ள பாதிப்புகளை பார்வையிட அத்தொகுதியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி விமானம் மூலம் கோழிக்கோடு வந்தார். முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுமாறு பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார்.