தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஆரோக்கிய சேது செயலியில் பயனாளர் தகவல்களுக்குப் பாதுகாப்பில்லை'

டெல்லி: ஆரோக்கிய சேது செயலியில் பயனாளர்களின் தகவல்களைக் கண்காணிக்கும் பணியைத் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்வதால் அதன் பாதுகாப்புத் தன்மை குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : May 3, 2020, 4:28 PM IST

இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கருத்தில்கொண்டு ஊரடங்கு மே 17ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக் காலத்தில் அரசு அலுவலகங்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

மேலும், கரோனா பரவல் குறித்து உடனடித் தகவல்களைப் பெற உதவும் வகையில் ஆரோக்கிய சேது என்ற செயலியைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆரோக்கிய சேது செயலியில் பயனாளர்களின் தகவல்களைக் கண்காணிக்கும் பணியைத் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்வதால் அதன் பாதுகாப்புத் தன்மை குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆரோக்கியா சேது செயலி, ஒரு அதிநவீன கண்காணிப்பு அமைப்பாகும்.

இதிலுள்ள தகவல்கள் எவ்வித அரசின் மேற்பார்வையும் இன்றி ஒரு தனியார் நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது. இது பயனாளர்களின் தகவல் தனியுரிமை குறித்தும் பாதுகாப்பு குறித்தும் கேள்விகளை எழுப்புகின்றன.

தொழில்நுட்பம் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்; ஆனால் பொதுமக்களின் அனுமதியின்றி அவர்களைக் கண்காணிக்கக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலாவும் ஆரோக்கிய சேது செயலியில் பயனாளர்கள் தகவல்களுக்குப் பாதுகாப்பில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதையும் படிங்க: விமான எரிபொருள் விலை கடும் சரிவு!

ABOUT THE AUTHOR

...view details