கரோனாவை எதிர்த்து மத்திய அரசு சிறப்பாக செயலாற்றுகிறது என அமைச்சர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இதனை ராகுல் காந்தி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா கோவிட்-19 க்கு எதிரான போரில் சிறப்பாக செயலாற்றுகிறதா? என்று ட்விட்டரில் குறிப்பிட்ட ராகுல் காந்தி, இந்தியா, தென்கொரியா, நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கரோனா தொற்றுப் பரவல் குறித்து விளக்கும் வரைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அந்த வரைப்படம் இந்தியாவில் தொற்று எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருவதை தெள்ளத்தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக உள்ளது.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “கரோனாவை இந்தியா சிறப்பாக எதிர்கொள்கிறது, உலக நாடுகள் இந்தியாவின் செயல்களைப் பாராட்டி வருகின்றன” என பேசியிருந்தார். இதனை விமர்சிக்கும் விதமாக ராகுல் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நாட்டில் ஒன்பது லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!