திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் இரண்டு வயது குழந்தை சுஜித் தவறி விழுந்த சம்பவம் அனைத்து தரப்பினரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சுஜித்தின் தலையைச் சுற்றி மண் விழுந்துள்ளதால் மீட்பு பணியில் சிக்கல் நிலவுகிறது. நேற்று முன்தினம் மாலை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததால் தற்போது ரிக் இயந்திரத்தைக் கொண்டு அருகில் குழி தோண்டிவருகின்றனர்.
‘சுஜித்தை மீட்க காலத்திற்கு எதிரான போராட்டம்’ - ராகுல் காந்தி - சுர்ஜித் ராகுல் காந்தி
டெல்லி: சுஜித்தை மீட்க காலத்திற்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இத்தகைய சூழலில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாட்டில் அக்டோபர் 25ஆம் தேதி ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சுர்ஜித் என்ற குழந்தையை மீட்க காலத்திற்கு எதிரான போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அந்தக் குழந்தையைக் காப்பாற்றி பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டிக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: #SaveSurjith மீண்டு வா சுர்ஜித்! - முதன்மை தகவல்கள் உடனுக்குடன்