தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'விஷவாயு விபத்து செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்' - ராகுல் காந்தி - ராகுல் காந்தி

டெல்லி: விஷவாயு விபத்து குறித்த செய்தி கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : May 7, 2020, 1:54 PM IST

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள கிராமத்தில் இயங்கிவரும் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதனால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். விஷவாயு சுவாசித்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், சுவாசக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "விஷவாயு விபத்து குறித்த செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அப்பகுதியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் செய்து தர வேண்டும்.

விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை மேற்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'விசாகப்பட்டினம் விஷவாயு விபத்தால் கலக்கமடைந்துள்ளேன்' - அமித் ஷா

ABOUT THE AUTHOR

...view details