இந்திய-சீன ராணுவத்திற்கிடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்த மாதம் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
தாக்குதலைத் தொடர்ந்து நாட்டு மக்களிடைய உரையாடும்போது பிரதமர் மோடி, "இந்திய நிலத்தை யாரும் ஆக்கிரமிக்கவில்லை" என்றார். இந்தியா பகுதியில் சீனா அமைத்திருந்த கூடாரத்தை நீக்க முயன்றபோது இந்த மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "சீனா நமது நிலத்தை கைப்பற்றிவிட்டதாக லடாக் பகுதிவாசிகள் கூறுகின்றர். பிரதமர் நமது நிலத்தை யாரும் கைப்பற்றவில்லை என்று கூறுகிறார். கண்டிப்பாக ஒரு தரப்பு பொய் கூறுகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.