சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்பூரில் தேசிய பழங்குடியினர் நடனத் திருவிழா நடைபெற்று வருகிறது. பாரம்பரிய நடனத்தைப் பாதுகாத்து மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் இந்த திருவிழாவில் 25 மாநிலங்களைச் சேர்ந்த 1,350 கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பழங்குடி நடனத்தை ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.