குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக எதிர்கட்சிகள் நாடு தழுவிய போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்திவரும் இவ்வேளையில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிஜாய் சோங்கர் சாஸ்திரி ஈடிவி பாரத் செய்தி இணையதளத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
அதன் விவரம் வருமாறு:-
குடியுரிமை சட்டத்தால் எந்த ஒரு இந்தியனும் பாதிக்கப்படமாட்டார்கள். ஆனால் அவர் (ராகுல் காந்தி) எப்படி சொல்லாம் அனைத்து இந்தியர்களும் பாதிக்கப்பட போகிறார்கள் என்று? ராகுல் காந்தி கூறிய கருத்துகள் பொய்யானவை. ஒன்று அவர் கூறிய கருத்துகளை நிரூபிக்க வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அசாமில் “தடுப்பு மையங்கள்” (சட்டவிரோத குடிகளை அடைத்து வைக்கும் இடம்) பாஜக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டதாகவும் ராகுல் கூறியுள்ளார். ஆனால் இந்த தடுப்பு மையங்கள் முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது உருவாக்கப்பட்டவை என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் ஏழைகள் மீதான இரண்டாவது பணமதிப்பிழப்பு தாக்குதல் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தாரே என்ற கேள்விக்கு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை தாக்குதல் என்றால் பாஜக எப்படி 300 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்திருக்க முடியும்? என்றார்.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிஜாய் சோங்கர் சாஸ்திரி பேட்டி குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வெள்ளிக்கிழமை (டிச27) கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, அது ஏழைகள் மீதான இரண்டாவது பணமதிப்பிழப்பு தாக்குதல் என கருத்து தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது. இதையும் படிங்க: காங்கிரஸ் முஸ்லிம்களை தவறாக வழிநடத்துகிறது மனோஜ் திவாரி