தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுலும், குமாரசாமியும் ‘ஜோக்கர்ஸ்’... மோடி தான் ‘ஹீரோ’: பாஜக எம்.எல்.ஏ! - குமாரசாமி

ஹுப்லி: ராகுலும், குமாரசாமியும் ஜோக்கர்கள் என்றும், மோடி தான் மக்களின் ஹீரோ எனவும் பாஜக எம்.எல்.ஏ பசவராஜ் பொம்மை தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

basavappa

By

Published : Apr 19, 2019, 11:38 AM IST

இந்தியா முழுவதும் 17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட தேர்தல்கள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன.

கர்நாடக மாநிலத்தைப் பொருத்த வரையில், மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. எஞ்சியுள்ள தொகுதிகளுக்கான அரசியல் கட்சிகளின் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பாஜகவும் காங்கிரஸும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசி பரப்புரை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநிலத்தின் பாஜக எம்.எல்.ஏ பசவராஜ் பொம்மை என்பவர், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியும், ராகுல் காந்தியும் ஜோக்கர்கள் என்றும், மோடி தான் ஹீரோ என்றும் பேசியுள்ளார். இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details