சீனாவுடனான எல்லைப் பிரச்னை குறித்து மக்களுக்கு வெளிப்படையாக பிரதமர் நேரந்திர மோடி எடுத்துரைக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார். இந்நிலையில் அவருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, 2017ஆம் ஆண்டில் டோக்லாம் பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மோதல் நடந்து கொண்டிருந்த சமயத்தில், அதே ஆண்டு ஜுலை மாதத்தில் ராகுல் காந்தி, டோக்லாம் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவந்த சீனாவின் பிரதிநிதியும், பூட்டானின் தூதரையும் சந்தித்ததாகக் கூறி அப்போது ராகுல் பதிவிட்ட ட்வீட்டை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது ட்விட்டரில் தற்போது பகிர்ந்துள்ளார்.
'ராகுல் காந்தியும் டோக்லாம் பேச்சுவார்த்தை குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும்'
டெல்லி: லடாக் பிரச்னை குறித்து பிரதமர் வெளிப்படையாகக் கூற வலியுறுத்தும் ராகுல் காந்தி, அப்போதைய டோக்லாம் பிரச்னையின்போது அவர் நடத்திய ரகசிய சந்திப்பு குறித்தும் பேச வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் கூறியுள்ளார்.
ravi shankar prasad rahul-gandhi
அவர்களுடனான நடந்த அந்தச் சந்திபை முதலில் காங்கிரஸ் மறைத்துவிட்டதாகவும், அதன்பிறகு பொதுவெளியில் ஒப்புக்கொண்டதாகவும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். ஆகவே டோக்லாம் குறித்து அவர் சீனா பிரதிநிதியுடன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை தொடர்பாக ராகுல் காந்தி எடுத்துரைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:இந்தியர்களின் டிஎன்ஏ-வில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது: ராகுல் காந்தி