ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடக்கவிருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரப் பரப்புரையில் களமிறங்கியுள்ளனர். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி அஹிர்வால் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் செய்த தவறை மீண்டும் செய்து பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்திவிடாதீர்கள். ஹரியானா மாநிலத்தைக் காப்பாற்றவும், பாஜக ஆட்சிக்குத் தக்கப் பாடம் புகட்டவும் காங்கிரஸ் கட்சிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
’மோடிக்கு பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது’ - ராகுல் - haryana election 2019
சண்டிகர்: பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் எழுதபதாயிரம் கோடி ரூபாய் நிதியை ஏழை, எளிய மக்களுக்கு கொடுத்துள்ளது. ஆனால் மோடி அரசோ ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டும் நிதியளிப்பதால், அப்பணமும் வெளிநாடு சென்றுவிடுகிறது. பொருளாதாரம் குறித்து மோடிக்கு எதுவும் தெரியாததால்தான், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியை அமல்படுத்தும் முறை ஆகியவற்றில் தவறான முடிவை எடுத்தார். நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை ஆகியவை குறித்து எதுவும் பேசாமல் மோடி தலைமையிலான அரசு மௌனம் காப்பது ஆச்சர்யமளிக்கிறது” என்று கூறினார்.