தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ராகுல் காந்தி அரசியல் செய்ய வேண்டாம்'- ராணுவ வீரரின் தந்தை கோரிக்கை! - தந்தை

டெல்லி: இந்திய ராணுவம் பலமிக்கது. அது சீனாவை தோற்கடிக்கும். இந்த விவகாரத்தில் நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, கல்வான் தாக்குதலில் காயமுற்ற ராணுவ வீரரின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

rahul-gandhi-dont-indulge-in-politics-father-of-injured-indian-jawan
rahul-gandhi-dont-indulge-in-politics-father-of-injured-indian-jawan

By

Published : Jun 20, 2020, 1:23 PM IST

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். பல வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்பி., ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் சீன ராணுவத்தின் தாக்குதலில் படுகாயமடைந்த வீரர் ஒருவரின் தந்தையைக் குறிப்பிட்டு, இந்திய வீரர்கள் சீன வீரர்களை ஆயுதமின்றி எதிர்கொண்டதால் உயிரிழப்புகளும், படுகாயங்களும் ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார் என்று கூறியிருந்தார்.

மேலும், “இது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அமைச்சர்கள் பலர் பொய்யான கருத்துகளை மக்களிடம் கூறிவருகின்றனர். இது நமது ராணுவ வீரர்களின் தியாகத்தை அவமதிக்கும் செயல்” எனவும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், கல்வான் தாக்குதலில் காயமுற்ற வீரர் ஒருவரின் தந்தை, ராகுல் காந்திக்கு காணொலி வாயிலாக பதில் அளித்துள்ளார்.

அதில், “ராணுவ வீரர்களின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” என ராகுல் காந்திக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், “இந்திய ராணுவம் சக்தி வாய்ந்தது. அது நிச்சயம் சீனப்படைகளை வெல்லும். எனது மகன் இந்திய ராணுவத்திற்காக போரிட்டான். இனி வரும் நாள்களிலும் அவன் இந்திய ராணுவத்திற்காக போரிடுவான்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த காணொலியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, “துணிச்சல்மிக்க ராணுவ வீரரின் தந்தை ராகுல் காந்திக்கு தெளிவான பதில் கொடுத்துள்ளார். ஒட்டுமொத்த நாடும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டிய தருணம் இது. ராகுல் காந்தியும் இதில் இணைய வேண்டும். மாறாக சிறுமைமிக்க அரசியலில் ஈடுபடக் கூடாது” என தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பேசும் பாஜக தலைவர்களின் கருத்துகளிலும் முரண்பாடு காணப்படுகிறது. இந்திய- சீன வீரர்கள் மோதலின் போது, இந்திய வீரர்கள் கைகளில் ஆயுங்கள் இருந்தது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார். இவரின் கருத்துக்கு முரண்படும் வகையில் பாஜக துணை தலைவர் பைஜயந்த் ஜெய் பாண்டாவின் கருத்து அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: கோவிட் ராணி விமர்சனம்: கேரள காங்கிரஸ் தலைவருக்கு கடும் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details