மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஏராளமான விவசாயிகள் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் போராட்டம் நடத்திவருகின்றனர். கொட்டும் பனியிலும், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராடிவருகின்றனர். இன்றுடன் (டிச. 07) அவர்களது போராட்டம் 12ஆவது நாளை எட்டியுள்ளது.
அதானிகளுக்கும், அம்பானிகளுக்குமான வேளாண் சட்டம் - ராகுல் காந்தி - நாடு தழுவிய வேலைநிறுத்தம்
டெல்லி: அதானிகளுக்கும் அம்பானிகளுக்குமான வேளாண் திருத்த சட்டங்களை நீக்க வேண்டும் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதற்கிடையே, வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், அதானிகளுக்கும் அம்பானிகளுக்குமான வேளாண் திருத்த சட்டங்களை நீக்க வேண்டும் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அதானிகளுக்கும் அம்பானிகளுக்குமான வேளாண் திருத்த சட்டங்களை நீக்க வேண்டும். அதை தவிர வேறு எதனையும் ஏற்க மாட்டோம்" என பதிவிட்டுள்ளார்.