தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ராகுல் காந்தி தொடர்ந்து தேசத்தை இழிவுப்படுத்துகிறார்'- ஜேபி நட்டா - பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: ஆயுதப் படை வீரர்களின் வீரத்தை கேள்விக்குள்ளாக்கி, நாட்டை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருவதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராகுலை சாடிய ஜெ.பி.நட்டா
ராகுலை சாடிய ஜெ.பி.நட்டா

By

Published : Jul 7, 2020, 12:46 AM IST

இதுதொடர்பாக ட்விட் செய்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, "ராகுல் காந்தி பாதுகாப்பு நிலைக்குழுவின் ஒரு கூட்டத்தில் கூட கலந்து கொள்ளவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் தொடர்ந்து தேசத்தை இழிவுபடுத்துகிறார், நமது ஆயுதப்படைகளின் வீரம் குறித்து கேள்வி எழுப்புகிறார், பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் செய்யக்கூடாத அனைத்தையும் செய்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "ராகுல் காந்தி புகழ்பெற்ற வம்ச பாரம்பரியத்தைச் சேர்ந்தவர், அங்கு குழுக்கள் ஒரு பொருட்டல்ல, கமிஷன்கள் மட்டுமே செய்கின்றன. காங்கிரசுக்கு நாடாளுமன்ற விஷயங்களைப் புரிந்துகொள்ள தகுதியான பல உறுப்பினர்கள் உள்ளனர், ஆனால் அந்த வம்சம் ஒருபோதும் அத்தகைய தலைவர்களை வளர விடாடது, உண்மையில் வருத்தமாக இருக்கிறது," என்று கூறியுள்ளார்.

" லடாக்கின் தேசபக்தர்கள் சீன ஊடுருவலுக்கு எதிராக குரல் எழுப்புகிறார்கள். அவர்கள் ஒரு எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பியிருக்கிறார்கள். அவர்களின் எச்சரிக்கையை புறக்கணித்தால் இந்தியா மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். இந்தியாவின் நன்மையை பொருட்டு, தயவுசெய்து அவற்றைக் கேளுங்கள்" என்று ராகுல் காந்தி முன்னதாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை லடாக்கில் நிம்மூவிற்கு விஜயம் மேற்கொண்டார்.

சீனாவுடனான தொடர்ச்சியான பதற்றங்களுக்கு மத்தியில் நிம்மூவில் உள்ள ராணுவ மூத்த அலுவலர்களுடன் எல்லையில் நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: தலாய் லாமாவுக்கு அமெரிக்க தூதர் பிறந்த நாள் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details