பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தற்போது ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் களத்தில் குதித்துள்ளார்.
இதன் முன்னோட்டமாக பிகார் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடம் காணொலி மூலம் தொடர்பு கொண்டு பேசிய ராகுல், தேர்தல் பரப்புரையில் தான் முழுவீச்சில் ஈடுபடவுள்ளதாக உறுதியளித்தார்.
மேலும் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் பின்னர் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்த ராகுல் தற்போது கள அரசியலில் தீவிரப் பணிகள் செய்து ஆட்சியைப் பிடிக்க கடும் உழைப்பை தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.