தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மக்களாட்சியைப் பாதுகாக்க போராடுவோம்' - ராகுல் காந்தி

டெல்லி: ராஜஸ்தானில் மக்களாட்சியைக் கவிழ்க்க பாஜக சதிசெய்துவருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ராகுல் காந்தி, மக்களாட்சியைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Jul 26, 2020, 12:39 PM IST

மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானிலும் தற்போது அரசியல் குழப்பம் நிலவிவருகிறது. முதலைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக இளம் தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இந்நிலையில், ஜனநாயகத்தைப் பாதுகாக்க பொதுமக்களைக் குரல் எழுப்புமாறு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "#SpeakUpForDemocracyஇல் ஒன்றுபடுவோம், ஜனநாயகத்தைப் பாதுகாக்க நமது குரலை ஓங்கி ஒழிப்போம்" என்று பதிவிட்டு, அத்துடன் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், பாஜக அரசியலமைப்பைச் சிதைப்பதாகவும் ஜனநாயகத்தைக் காலி செய்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், ராஜஸ்தானிலும் பாஜக ஜனநாயகத்தைக் கொலை செய்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

"இன்று, நாடு முழுவதும் கரோனா வைரசுக்கு எதிராகப் போராடும்போது, ​​பாஜக அரசியலமைப்பைச் சிதைத்து, நமது ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்குகிறது. 2018ஆம் ஆண்டு ராஜஸ்தான் மக்கள் காங்கிரஸ் அரசைத் தேர்ந்தெடுத்தனர்.

இன்று, மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக சதி செய்துவருகிறது.

ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்க்கும் நடவடிக்கைகளைப் பாஜக உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசியலமைப்பு உரிமைகளின்படி உடனடியாக ஒரு சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும். உங்கள் குரலை உயர்த்துங்கள், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் #SpeakUpForDemocracy" என்று என்று வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக குதிரை பேரம் நடத்துவதாக காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா பரிசோதனை குறித்து யோகி ஆதித்யநாத் இலக்கு நிர்ணயம்!

ABOUT THE AUTHOR

...view details