தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமேதி, ரேபரேலியில் வாக்குப்பதிவு -  ஒரு ஸ்பீட் பார்வை! - மக்களவை தேர்தல்

உத்தரப்பிரதேசத்தின் எம்.பி.தான் நாட்டின் அடுத்த பிரதமர் என்ற முழக்கங்களுக்கு நடுவே அம்மாநிலத்தின் அமேதி, ரேபரேலி உள்ளிட்ட தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாளை தேர்தலை காணும் அமேதி-ரேபரேலி ஓர் பார்வை!

By

Published : May 5, 2019, 10:21 PM IST

Updated : May 7, 2019, 7:59 AM IST

உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. உத்தரப்பிரதேச தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை நான்கு கட்டங்கள் முடிவடைந்துள்ளன.

ஐந்தாம் கட்டமாக ஃபைசாபாத், அமேதி, ரேபரேலி உட்பட 14 தொகுதிகளுக்கு மே 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அமேதியில் முக்கிய வேட்பாளார்களாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி

ரேபரேலி தொகுதியில் ஐந்து லட்சத்து 77 ஆயிரத்து 146 வாக்காளர்கள் உள்ளனர். பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங், தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர், கடந்த நான்கு முறை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் வெற்றிபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியை, தற்போது எதிர்கொள்கிறார். இந்திரா காந்தி, அவரது கணவர் ஃபெரோஸ் காந்தி, நேரு உறவினரான சிலா ஆகியோரை அடுத்து ரேபரேலி தொகுதியின் வெற்றிமுகமாக சோனியா காந்தியைத்தான் காங்கிரஸ் பார்க்கிறது.இந்தத் தேர்தலில் சோனியாவின் வெற்றியை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ராகுல் காந்திக்கு எதிராக அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி போட்டியிடுகிறார்

நான்கு லட்சத்து 84 ஆயிரத்து 006 வாக்காளர்கள் உள்ள அமேதி தொகுதியில் 2004, 2009, 2014 தேர்தல்களில் வெற்றி பெற்ற ராகுல் காந்திக்கும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மே 6ஆம் தேதி நடைபெற உள்ள 14 தொகுதிகளில், 56 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், அமேதியில் மட்டும் அதிகபட்சமாக 14 சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். மேலும் ராகுல் காந்தி போட்டியிடும் மற்றொரு தொகுதியான கேரள மாநிலம் வயநாடுவில், ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது.

இந்த மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்துவரும் நிலையில் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் சோனியா, ராகுலுக்காக மானசீக அடிப்படையில் அந்தக் கூட்டணி சார்பில் யாரும் வேட்பாளர்களாக நிறுத்தவில்லை.

இந்தத் தேர்தலில் பாஜக-ஆர்எஸ்எஸ்ஸை தோற்கடிப்பதே எங்கள் கூட்டணியின் பிரதான இலக்கு. காங்கிரஸ் அல்ல என பகுஜன் சமாஜ் தலைவர் மாயவதி தெரிவித்திருந்தார்.

பாஜக-ஆர்எஸ்எஸ்ஸை தோற்கடிப்பதே எங்கள் கூட்டணியின் பிராதான இலக்கு-மாயாவதி

பாஜக தலைவர்கள் தேர்தல் பரப்புரையின்போது, மோடியின் திட்டமான இலவச கழிப்பறைகள் உட்பட பல நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரிக்க, மறுபுறம் ராகுலோ, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்தார்.

இந்தியாவிலேயே உத்தரப்பிரதேசத்தில்தான் அதிகபட்சமான பட்டியலினத்தவர்கள், சிறுபான்மையினர் உள்ளனர். இவர்களுக்கு நடக்கும் ஒடுக்குமுறையும், அநீதிகளும் ஏராளம். அம்மக்களிடையே குறைவான கல்வியறிவு, தீர்க்கப்படாத அடிப்படை பிரச்னைகள் பல விஷயங்கள் இருக்கும் நிலையில் வெற்றிபெரும் கட்சியினர் அதனை எப்படி கையாளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மக்கள் காலத்துக்கு ஏற்ப தங்களின் சிறந்த தலைவரை, சிந்தித்தது தேர்ந்தேடுக்க வேண்டியது அவசியமாகும்

இம்மாநிலத்தில் உள்ள சாதி கட்சிகளாலும் சரி, மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் கட்சிகளானாலும் சரி, இதனை சரிசெய்ய முழுத் தீர்வை ஏற்பட வழி செய்யாமல், மக்களிடம் வாக்கு அரசியல் செய்து வருவது வேதனையளிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Last Updated : May 7, 2019, 7:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details